Thursday, December 4, 2008

இதற்குப் பெயர் மனிதாபிமானம்!

துவும் தட்ஸ்தமிழ் செய்திதான். நமது இதயம் தொட்ட ஒரு செய்தி. கூடுதல் அலங்காரங்களின்றி அப்படியே தருகிறோம்...

இந்தியர் இதயம் தொட்ட லண்டன்வாசிகள்!

லண்டன்: மனிதாபிமானம் என்று வந்துவிட்டால் மதங்களும் நாடுகளின் எல்லைகளும் குறுக்கே நிற்பதில்லை (அதாவது மனிதாபிமானமுள்ள நாடுகளுக்கும் அதன் மக்களுக்கும்!) என்பதற்கு இதோ இன்னுமோர் உதாரணம்.

மும்பையில் சில தினங்களுக்கு முன் நடந்த கொடூர தீவிரவாத தாக்குதல்களில் உயிரிழந்த அப்பாவி மக்கள் மற்றும் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு லண்டன்வாசிகள் திரண்டு வந்து இன்று அஞ்சலி செலுத்தினர்.

லண்டனின் வர்த்தக மையமான கேனரி டவர் பகுதியில் நூற்றுக்கணக்கான மெழுகுவர்த்திகளை ஏற்றி தங்கள் இதயப் பூர்வ அஞ்சலியைத் தெரிவித்தனர்.

லண்டன் மாநகரின் மையப்பகுதியான இங்கு எனக்குத் தெரிந்து இந்த இரு ஆண்டுகளில் இத்தனை உணர்ச்சிப்பூர்வமான, நெகிழ வைக்கும் காட்சியை நான் கண்டதில்லை. நூற்றுக்கணக்கான மெழுகு வர்த்திகளைக் கைகளில் ஏந்தியபடி அமைதி (PEACE) என்ற எழுத்து வடிவத்தில் அந்த வெள்ளைக்காரர்கள் நின்ற காட்சி என் இதயத்தைத் தொட்டது. தீவிரவாதத்தால் காயம்பட்ட இந்திய இதயங்களுக்கு ஒரு ஒத்தடமாக எனக்குப் பட்டது இந்தச் செயல்.

-அண்ணாமலை நடராஜன்

3 comments:

நண்பன் said...

செய்தி நன்றாக இருக்கலாம். ஆனால், தீவிரவாத தாக்குதலைக் காரணமாகக் கொண்டு, கிரிக்கெட் விளையாட மறுத்து வெளியேறிய டீமை என்னவென்று சொல்வது?

அபுதாபிக்குப் போய்விட்டார்கள். அங்கிருந்து தங்கள் பாதுகாவலர்களை அனுப்பி, எல்லாம் சரியாகிவிட்டதென்றால், வருகிறோம் என்று சொல்லிவிட்டு. கிட்டத்தட்ட நம்மைக் கைவிட்டது போன்று தான் இதுவும். 'தீவிரவாதத்தைக் கண்டெல்லாம் நாங்கள் அஞ்சப் போவதில்லை. மாறாக, எத்தனை மிரட்டினாலும், அஞ்சாமல் நின்று விளையாடுவோம்' என்று பதில் சொல்லியிருந்தால், அது தீவிரவாதத்திற்கு எதிராகக் கொடுக்கப்பட்ட அடியாக இருந்திருக்கும். ஆனால், அதை விட்டு,உலகின் மிக பாதுகாப்பற்ற 20 நாடுகளில் ஒன்று என ரேட்டிங் போட்டு, நமது சுற்றுலாத்துறையை இவர்கள் காலி செய்து விடுவார்கள் போலிருக்கிறது.

பிரிட்டிஷ் பிரதமர் சொல்கிறார் - அவசியமில்லாமல், இந்தியாவிற்குப் போக வேண்டாம் என்கிறார். ஆஸ்திரேலிய அரசு, பயணத்தடை விதிக்கிறது. இதெல்லாம், தீவிரவாதத்திற்கெதிரான யுத்தத்தில் இந்தியாவைக் கைவிட்ட நிலையைத் தான் சொல்கின்றன. உலகத்தினருக்கு எதிரான யுத்தம் தீவிரவாதம் என்று வாய் கிழியப் பேசும், இவர்கள், இந்த அச்சுறுத்தலையெல்லாம் தூக்கியெறிந்து விட்டு, நமக்கு ஆதரவு கரம் நீட்டியிருக்க வேண்டும்.

ஒரே ஒரு ஆறுதல் - ஸ்ர் இயான் போத்தம் கண்டித்திருக்கிறார் - இந்தியாவில் கண்டிப்பாக ஆட வேண்டும் - இல்லையென்றால், இந்தியாவின் தீவிரவாதத்திற்கெதிரான யுத்தத்தில் இந்தியாவை நாம் கைவிட்ட பாவத்திற்கு ஆளாவோம் என்று.

போத்தமைப் பாராட்டுவோம். அவருடைய அக்கறையையும், பரிவையும் அனைவரும் காட்டுவார்கள் என்று எதிர்பார்ப்போம்.

Vaanathin Keezhe... said...

உண்மைதான்...

Anonymous said...

நண்பன் அவர்களே,கிரிக்கெட் வீரர்களுக்கு கிரிக்கெட் என்பதே வாழ்க்கை இல்லை. எப்போது வேண்டுமானாலும் விளையாடிக் கொள்ளலாம். எந்நாட்டு உயிராக இருந்தால் என்ன? உயிர் போனால் வராது. அவர்கள் செய்தது சரியே.

//கிட்டத்தட்ட நம்மைக் கைவிட்டது போன்று தான் இதுவும்.//
கிரிக்கெட் வீரர்கள் இருந்திருந்தால் மட்டும் தீவிரவாதிகளை எதிர்த்து சண்டையா போட்டிருக்கப் போகிறார்கள்?