Friday, December 25, 2009
Wednesday, April 22, 2009
இந்தியா நட்சத்திரங்களில் யார் டாப்?
உங்கள் அபிமான நட்சத்திரம் யார்?
ஐபிஎன் லைவ் இணைய தளத்தில் (வெப் 18 குழும தளம் in.com) இப்போது நடைபெற்று வரும் ஓட்டெடுப்பு இது. இந்திய அளவில் ரசிகர்களின் அபிமானம் பெற்ற நட்சத்திரம் யார் என்ற ஓட்டெடுப்பில் அமிதாப் உள்ளிட்ட 161 நட்சத்திரங்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
இவர்களில் முதலிடம்… சந்தேகமே இல்லாமல் நம்ம சூப்பர் ஸ்டாருக்குதான்.
இதுவரை 197817 வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 9000 பேர் ரஜினியை தங்கள் விருப்ப நட்சத்திரமாக தேர்வு செய்துள்ளனர். ரஜினிக்கு எதிராகப் பதிவாகியுள்ள வாக்குகள் 3288.
‘ரஜினிக்கு இவ்வளவு உயர்ந்த இடம் கிடைத்திருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. காரணம் தனக்கு கிடைத்த புகழை அவர் தவறாகப் பயன்படுத்தவில்லை. நானே சூப்பர்ஸ்டார் என அவர் தலைகனம் கொள்ளவும் இல்லை’ என ஒரு வாசகர் கருத்து தெரிவித்திருந்தார். (வழக்கம்போல எதிர்த்து எழுதியிருந்தவர்களும் உண்டு. இவர்கள் எங்கும் நிறைந்தவர்கள். திருத்த முடியாது.)
ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் ஒரு பக்கத்தை உருவாக்கியிருக்கிறார்கள். யாரும் போய்க்ளிக்கி வாக்களிக்கலாம்.
அவருக்கு அடுத்த நிலையில் இருப்பவர் மிதுன் சக்கரவர்த்தி. அவருக்குக் கிடைத்துள்ள வாக்குகள் 133247. எதிர்ப்பு வாக்குகள் 239. அமிதாப்புக்கு மூன்றாவது இடம். அவருக்கு கிடைத்துள்ள வாக்குகள் 69268. எதிர்ப்பு வாக்குகள் 2527.
ஷாரூக்கானுக்கு ஐந்தாவது இடம். இவருக்கு ஆதரவாகக் கிடைத்துள்ள வாக்குகளை விட எதிராகக் கிடைத்துள்ள வாக்குகளே அதிகம். 52942 பேர் ஆதரித்தும் 71218 எதிர்த்தும்வாக்களித்துள்ளனர்.
கமல்ஹாசனுக்கு 3255 பேர்தான் வாக்களித்துள்ளனர். அவருக்கு எதிராக 615 பேர் வாக்களித்துள்ளனர். இவருக்கு கிடைத்துள்ள இடம் 29.
இந்தப் பட்டியலில் 10 வது இடத்திலிருக்கிறார் அஜீத் (ஆதரவு 43394 , எதிர்ப்பு 1219). சூர்யாவுக்கு 13வது இடம் (ஆதரவு 17930 , எதிர்ப்பு 725) .
நடிகைகளில் இப்போதும் முதலிடம் ஐஸ்வர்யா ராய்க்குத்தான். ஆதரவாக 46853 பேரும் எதிர்த்து 5506 பேரும் வாக்களித்துள்ளனர்.
இது ஒரு ஒப்பீடல்ல. முழுக்க முழுக்க ரசிகர்களின், நடுநிலை பார்வையாளர்களின் விருப்பத்தின் பிரதிபலிப்பே இது.
உலகமெங்கிலும் உள்ள தமிழ், இந்தி திரைப்பட ரசிகர்களும் வாக்களித்திருப்பார்கள்.
நடிகர்கள் தவிர, அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் என பல்வேறு பிரிவினரில் மக்களின் அபிமானம் பெற்றவர்கள், எதிர்ப்பைப் பெற்றவர்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது. கீழ்வரும் லிங்கை கிளிக்குங்கள், நீங்களும் வாக்களியுங்கள்!
Last 24 hours | Last 7 days | All time
![]() Rajinikanth 198262 ![]() ![]() 1982623457 |
![]() Amitabh Bachchan 69268 ![]() ![]() 692682527 |
![]() Salman Khan 59225 ![]() ![]() 5922532220 |
![]() Shah Rukh Khan 53153 ![]() ![]() 5315371219 |
![]() Akshay Kumar 45263 ![]() ![]() 452635633 |
![]() Hrithik Roshan 43819 ![]() ![]() 438192268 |
![]() Aamir Khan 43278 ![]() ![]() 4327816296 |
![]() Kamal Haasan 3259 ![]() ![]() 3259616 |











